சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகாவுக்கு விரட்டும் பணி தீவிரம்
- இன்று அதிகாலையில் அந்த யானை காமன்தொட்டி, தாசன்புரம் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது.
- ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சானமாவு வனபகுதியில் இரண்டு மாதங்களாக சுற்றி திரிந்த ஒற்றை ஆண் யானை தற்போது இன்று அதிகாலையில் காமன்தொட்டி, தாசன்புரம் வழியாக செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றது.
இந்த யானை ஊருக்குள் நுழையாமல் வனப்பகுதி ஒட்டி விளை நிலங்களில் பயிர்களை சாப்பிட்டு விட்டு மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு தஞ்சம் அடைகிறது.
இந்த ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப். வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் புளியரசி, செட்டி பள்ளி, சக்காரலு, கடத் துர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தேவையின்றி வன பகுதிகளுக்கு விறகு வெட்ட, ஆடு, மாடுகள் மேய்க்க செல்ல வேண்டாம். யானையை நேரில் பார்த்தால் வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிய விட வேண்டும். யானையை விரட்டு வகையில் நெருப்புகளையும், வெடி சத்தம் முழக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.