உள்ளூர் செய்திகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவுதுறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவுதுறை முதன்மை செயலாளர் ஆய்வு

Published On 2022-09-25 10:33 GMT   |   Update On 2022-09-25 10:33 GMT
  • 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டி.பி.சி. திறப்பதற்கு ஆலோசனை.
  • விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை ஆகியவற்றில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்பு அவர் நிருபவரிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 117 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளது நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது இதற்காக தேவைப்படும் இடங்களில் ஒரே இடத்தில் இரண்டு கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டிபிசி திறப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளபடும் அதிகாரிகள் கனிவுடன் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு 120 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுற வங்கிகளில் கடன் கொடுக்கும் சங்கமாக இல்லாமல் வங்கி சேவை போன்று பல்வேறு சேவைகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ரேஷன் அரிசி தேவை இல்லை என்றால் அதனை வாங்க வேண்டாம் அதனால் ரேஷன் கார்டு இல்லாமல் போகாதுதமிழகத்தில் 109 நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன மேலும் 20 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாக திறந்த வெளி நெல் குடோன் இல்லை என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்

எருக்கூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் (சைலோ) விஞ்ஞான சேமிப்பு களன் செயல்பட வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 40 வசூல் செய்வதாக எழுப்பிய கேள்விக்கு ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில் விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூல் செய்யக்கூடாது இது தொடர்பாக கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்

அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, செயற்பொறியாளர் குணசீலன், கண்காணிப்பு பொறியாளர் ராஜா மோகன், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜகுமார், தாசில்தார் செந்தில்குமார், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், கூட்டுறவு கடன் சங்க தலைவர் போகர்.ரவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News