உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2023-01-24 10:25 IST   |   Update On 2023-01-24 10:25:00 IST
  • 71 அடி உயரம் கொண்டுள்ள அணையில் நீர்மட்டம் 52.36 அடியாக உள்ளது. 1019 கன அடி நீர் வருகிறது.
  • இன்று காலை நிலவரப்படி 600 கன அடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டு மொத்தம் 1669 கன அடிநீர் திறக்கப் பட்டுள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அைண மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை மாநகர முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. 71 அடி உயரம் கொண்டுள்ள அணையில் நீர்மட்டம் 52.36 அடியாக உள்ளது. 1019 கன அடி நீர் வருகிறது.

மதுரை மாநகர குடிநீர் பாசனத்துக்காக 1069 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி 600 கன அடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டு மொத்தம் 1669 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இருப்பு 2317 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. 74 கன அடி நீர் வருகிறது. 1267 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 4837 மி. கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.55 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. 80 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 348.50 மி.கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 107.91 அடியாக உள்ளது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 71.28 மி.கன அடியாக உள்ளது.

தேக்கடி 4, கூடலூர் 1.4, சண்முகாநதி அைண 3.6, உத்தமபாளையம் 2.8, போடி 1.8, சோத்துப்பாறை 4, வைகை அணை 3, ஆண்டிபட்டி 2.8. அரண்மனைபுதூர் 1.2 மி.மீ. என மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News