உள்ளூர் செய்திகள்

கோமுகி அணையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.

நீர்வரத்து அதிகரிப்பு கோமுகி அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்வு

Published On 2022-08-06 08:53 GMT   |   Update On 2022-08-06 08:53 GMT
  • நீர்வரத்து அதிகரிப்பு கோமுகி அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்தது.
  • பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்க ப்பட்டது. தற்போது கோமுகி அணை யில் 20 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.

கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்வராயன்மலையில் உள்ள தடுப்பணைகள் தண்ணீர் நிரம்பி கொட்டுகிறது இதனால் கல்வராயன்மலை அடி வாரமான கல்படை .பொ ட்டியம் .ஆகிய ஆறுகளின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி நீர் வரை கோமுகி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் 20 அடியில் இருந்து தற்போ து 40அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் தொடர்ந்து கோமுகி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டி ருப்பதால் கோமுகி அணையின் நீர்மட்டம் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவான 44 அடியை எட்டிவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவி த்துள்ளனர்.

Tags:    

Similar News