உள்ளூர் செய்திகள்

காய்கறி சாகுபடி செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும்

Published On 2022-07-10 09:25 GMT   |   Update On 2022-07-10 09:25 GMT
  • மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

ஈரோடு:

பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. அதனை ஒட்டிய, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நிமிட்டிபாளையம், சின்னமல்லான்பாளையம் போன்ற வருவாய் கிராமங்களில் தக்காளி, கத்தரி, அவரை, வெண்டை, கீரை, பீர்க்கன், புடலை, பாகல் போன்ற காய்கறி பயிர்களும், மா, வாழை, கொய்யா, நெல்லி போன்ற பழ வகைகளும், 1,200 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

பெருந்துறை உழவர் சந்தையிலும், அதனை ஒட்டிய வருவாய் கிராமங்களிலும் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்செல்வி ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, 'இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை, உழவர் சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம்.

பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்தவும், காய்கறி வரத்தை அதிகரிக்க மாநில அபிவிருத்தி திட்டத்தில் காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News