உள்ளூர் செய்திகள்

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கலெக்டர் சரயு, சட்டமன்ற உறுப்பினர் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலையில் திட்ட குழு உறுப்பினர் பதவி ஏற்று கொண்டனர்.

திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

Published On 2023-06-29 09:24 GMT   |   Update On 2023-06-29 09:24 GMT
  • தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் ஒரு கண்ணோட்டம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது.
  • மாவட்ட திட்டக்குழுவின் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட திட்டக்குழு துணை தலைவரும், கலெக்டருமான சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்டக்குழு அலுவலர் சாந்தா வரவேற்றார்.

இதில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட கதிரவன், சங்கர், மம்தா, அனிதா, பூதட்டியப்பா, வெங்கடாசலம் என்கிற பாபு, சசிகலா, பழனி, வித்யா, சீனிவாசலு, சுனில்குமார், மணிவண்ணன் ஆகியோர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட திட்டக்குழுமம் ஒரு கண்ணோட்டம் குறித்து குறும்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் மாவட்ட திட்டக்குழுவின் கூட்டப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் பிரச்சன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட ஊராட்சி செயலாளர் சாந்தா, கிருஷ்ணகிரி நகராட்சி பரிதா நவாப், நகர தி.மு.க. செயலாளர் நவாப், ஒன்றிய குழு தலைவர்கள் சீனிவாசலு ரெட்டி, உஷா குமரேசன், சசி வெங்கடசாமி, கேசவமூர்த்தி, நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News