உள்ளூர் செய்திகள்

கூடலூரில் உழவர் சந்தை திறப்பு-அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்பு

Published On 2022-07-23 15:19 IST   |   Update On 2022-07-23 15:19:00 IST
  • 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கப்பட்டது.
  • விசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

ஊட்டி:

கூடலூா் பஸ் நிலையம் அருகே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் புதுப்பொலிவுடன் கூடிய உழவா் சந்தையை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

பின்னர் அவர் பேசுகையில், உழவா் சந்தை மூலம் இடைத்தரகா் இல்லாமல் விவசாயிகள் தங்களது பண்ணை காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், அதற்கு சரியான விலையையும் பெறலாம். மேலும், நுகா்வோா் தரமான பொருள்களை வெளிசந்தையை விட குறைந்த விலையில் வாங்க முடியும் என்றாா். இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

மேலும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு உறுப்பினா்களின் பங்குத் தொகைக்கு, இணை பங்குத் தொகையாக ரூ.5 லட்சம் அரசு மானியத்தையும், முதுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.2.01 லட்சம் மானியமும் வழங்கினாா்.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கினாா்.

தேவாலா பகுதியில் காட்டு யானைகள் தாக்கி வீடுகள் சேதமடைந்த பாதிக்கப்பட்ட நபா்களுக்ககு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா். இதில் கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, தோட்டக்கலை உதவி இயக்குநா் விஜியலட்சுமி, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நகர செயலாளர் இளஞ்செழியன்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News