கள்ளக்காதல் விவகாரத்தில் ஐ .டி. நிறுவன உரிமையாளரை காரில் கடத்திய கும்பல்
- உஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
- போலீசார் விரைந்து சென்று காரை மடக்கி அஜித்குமாரை மீட்டனர்.
கிருஷ்ணகிரி,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஐ .டி . நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருக்கும் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் உஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
உஷா தற்போது காவேரிப்பட்டினத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பர்கூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் உஷாவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அவரிடம் அஜித்குமார் குடித்துவிட்டு வந்து தனக்கு தொந்தரவு தருவதாக உஷா கூறியுள்ளார். இதையடுத்து உஷாவை பார்க்க வந்த அஜித்குமாரை ஆறுமுகம் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றார்.
இதைக்கண்ட பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் போலீசார் விரைந்து சென்று காரை மடக்கி அஜித்குமாரை மீட்டனர். ஆறுமுகம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.