உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சையில், விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-19 15:29 IST   |   Update On 2022-10-19 15:29:00 IST
  • விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏமாற்றுகிறது.
  • விவசாயிகள் நாமம் போட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தஞ்சாவூர்:

யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்களின் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும், கூட்டுறவு சொசைட்டியில் காலதாமதப்படுத்தாமல் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும், 2021-22-ம் ஆண்டிற்கான விட்டுப் போன நெல் சாகுபடி விவசாயிகளுக்கான இன்சூரன்ஸ் தொகையை கால தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் என்பதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏமாற்றுகிறது என்பதை உணர்த்தும் வகையில் விவசாயிகள் நாமம் போட்டு கோஷமிட்டனர்.

இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

மாநில செயலாளர் உலகநாதன், அரவிந்தசாமி, துரைராஜ், ஜெகதீஷ், பவுன்ராஜ், ஜெயபால், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News