உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், ஏ.ஐ.டி.யூ.சி. 103-வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சையில், ஏ.ஐ.டி.யூ.சி. 103-வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி

Published On 2022-10-31 10:10 GMT   |   Update On 2022-10-31 10:10 GMT
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
  • பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.

தஞ்சாவூர்:

தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் 103-வது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சி மாவட்டத்தில் அனைத்து சங்க கிளைகள் முன்பாகவும் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

தஞ்சையில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்சேவையா தலைமை வகித்தார். மாநில செயலாளர்சந்திரகுமார் அமைப்பு நாள் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கீழவாசல் கட்டுமான சங்க கொடியினை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

அரசு போக்குவரத்துக் கழகம் கரந்தை புறநகர் பணிமனை, அரசு போக்குவரத்து கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சை நகர கிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ. ஐ .டி. யூ. சி. அமைப்பு நாள் கொடியேற்றப்பட்டது.

இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் துரை மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, தலைவர் மல்லி ஜி.தியாகராஜன், அரசு போக்குவரத்து கழக சங்க பொதுச் செயலாள ர்தாமரைச்செல்வன், பொருளாளர்ராஜமன்னன்,  

Tags:    

Similar News