சாமல்பட்டியில் தொழிலாளியை தாக்கிய அரசியல் கட்சி பிரமுகர் கைது
- ஜிம்மோகன் மறித்து நீ எதற்கு இந்த மறியல் போராட்டத்திற்கு வரவில்லை என வாக்குவாதம் செய்தார்.
- இதனால் ஆத்திரமடைந்த ஜிம்மோகன் கல்லை எடுத்து புகழேந்தி மார்பு பகுதியில் குத்தி தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் என்கிற ஜிம்மோகன் (வயது43). அரசியல் கட்சி பிரமுகரான இவரது தலைமையில் நேற்று முன்தினம் சாமல்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி (40) என்பவரை ஜிம்மோகன் மறித்து நீ எதற்கு இந்த மறியல் போராட்டத்திற்கு வரவில்லை என வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜிம்மோகன் கல்லை எடுத்து புகழேந்தி மார்பு பகுதியில் குத்தி தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து போலீசில் அவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஜிம்மோகனை கைது செய்தனர். கைதான இவர் மீது பல்ேவறு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.