சேலத்தில், பெண் கொலை கைதான கணவர் சேலம் ஜெயிலில் அடைப்பு
- முதல் மனைவியை பிரிந்து மாதேஸ்வரன் வாழ்ந்து வந்தார்.
- மாதேஸ்வரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் 4-வது வீதி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி மகாலட்சுமி.
முதல் மனைவியை பிரிந்து மாதேஸ்வரன் வாழ்ந்து வந்தார். டவுனில் உள்ள டைல்ஸ் கடையில் மாதேஸ்வரன் வேலைபார்த்தபோது உடன் வேலை செய்த ஷெகனாஷ் (42) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஏற்கனவே ஷெகனாஷ் திருமணம் ஆகி கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவரவே மாதேஸ்வரன், ஷெகனாஷை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மற்றும், குழந்தைகளை பிரிந்து அவர், ஷெகனாசுடன் தாகூர் தெரு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சேலம் டவுனில் வசித்து வரும் வேறு ஒரு வாலிபருடன் ஷெகனாஷூக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த மாதேஸ்வரன், தனது மனைவியை கண்டித்தார். இருப்பினும் ஷெகனாசுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கள்ளத் தொடர்பு நீடித்தது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் கணவன் -மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேஸ்வரன் திடீரென ஷெகனாஷின் கழுத்தில் துண்டால் இறுக்கி அவரை துடிக்க துடிக்க கொலை செய்தார்.
ெஜயிலில் அடைப்பு
இந்த கொலை சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாதேஸ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இதையடுத்து போலீசார், நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவரை மருத்துவ பரிசோ தனைக்கு உட்படுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று, நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி, அவரை சேலம் மத்திய ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாதேஸ்வரனை ேபாலீசார் சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தனர்.