உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டையில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-09-01 15:17 IST   |   Update On 2022-09-01 15:17:00 IST
  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தகூடாது.
  • வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டையில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

தேன்கனிக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தகூடாது வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நம்ம ஊரு சூப்பர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன் பின் நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பாதகையுடன் பேரணி நடத்தப்பட்டது இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகிலன், சுகாதார மேற்பார்வையாளர் ஏகாம்பரம், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கஞ்சப்பன் , ஊராட்சி செயலாளர்கள் சாந்த குமார், கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News