உள்ளூர் செய்திகள்

மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள்.

ராயக்கோட்டையில் இடைநின்ற 6 மலை வாழ் மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

Published On 2022-09-24 15:22 IST   |   Update On 2022-09-24 15:22:00 IST
  • பள்ளிச் செல்லா 6 மலைவாழ் குழந்தைகளை கண்டறிந்தனர்.
  • ராயக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், கெலமங்கலம் ஒன்றியம், ஆர்.குட்டூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று, தற்போது ராயக்கோட்டை பகுதிக்கு இடம் பெயர்ந்த பள்ளிச் செல்லா 6 மலைவாழ் குழந்தைகளை கண்டறிந்தனர்.

அவர்களை, கெலமங்க லம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் கிருஷ்ணதேஜஸ் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்சேட்டு, பயிற்றுனர் வேடி யப்பன், பள்ளி தலைமையாசிரியர்களான சையத் ஜலால் அகமத் மற்றும் சித்ரகலா மற்றும் ஆசிரியர்களான மாதேஷ், சாரதா உள்ளிட்டோர் ராயக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.

Tags:    

Similar News