உள்ளூர் செய்திகள்

நிவேதா முருகன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

புதுக்குப்பத்தில், கடற்கரை ஓரங்களில் கருங்கற்கள் கொட்டும் பணி- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

Published On 2022-12-13 09:07 GMT   |   Update On 2022-12-13 09:07 GMT
  • மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை.

சீர்காழி:

சீர்காழி அருகே புது குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் பருவநிலை மாறுபாடு மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன்வளத் துறை சார்பில் கடற்கரை ஓரங்களில் தடுப்பு சுவர் மற்றும் மீன் உலர் தளம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கல் கொட்டும் பணி, வலை பின்னும் கூடம், அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா புதுகுப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார்.

நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

இதில் காவிரி பூம்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், நிர்வாகிகள் ஜி.என்.ரவி, பழனிவேல், மீன்வளத் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மீன்வளத்துறை உதவி செயற் பொறியாளர் ரபீந்திரநாத், உதவி பொறியாளர் சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News