உள்ளூர் செய்திகள்

மின்கம்பத்தை சுற்றி படர்ந்துள்ள செடி,கொடிகள்.

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி,கொடிகள்

Published On 2022-11-28 15:14 IST   |   Update On 2022-11-28 15:14:00 IST
  • செடி, கொடிகள் மண்டி தற்போது கம்பத்தில் படர்ந்து மின்கம்பியை தொடும் நிலையில் வளர்ந்துள்ளன.
  • செடி கொடிகளை அகற்றி பாதுகாப்பான முறையில் மின்விநியோகம் வழங்க வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மின் பகிர்மான நிலையத்திற்கு சொந்தமான எல்லையில் உள்ள மோளையானூர் பேருந்து நிறுத்தம், வெங்கடமுத்திரத்தில் இருந்து முள்ளிக்காடு செல்லும் பாதை , ஏ. பள்ளிப்பட்டியில் இருந்து சர்க்கரை ஆலை செல்லும் சாலை மற்றும் ஏராளமான இடங்களில் விவசாய நில பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடி, கொடிகள் மண்டி தற்போது கம்பத்தில் படர்ந்து மின்கம்பியை தொடும் நிலையில் வளர்ந்துள்ளன.

சமீபத்தில் பருவமழை பொழிந்ததால் இவை அதிக அளவில் வளர்ந்து மின் கம்பியின் மீது கொடி போல படர்ந்துள்ளது. இதனால் மின் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. விவசாய நிலங்களில் விவசாயிகள் தண்ணீர் விட்டு வயல் வேலையை செய்யும்

போது மின் விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்ச உணர்வுடனே தற்போது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்

எனவே பாப்பிரெட்டிப் பட்டி மின்வாரியம் உடனடியாக தனி கவனம் செலுத்தி மின் கம்பங்களில் சுற்றியுள்ள செடி கொடிகளை அகற்றி பாதுகாப்பான முறையில் மின்விநியோகம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News