ஊத்தங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா
- முதல்வர் லீனா ஜோஸ் மாணவர் பேரவையின் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
- நிகழ்ச்சிகளை மாணவிகள் கார்த்திகா ஸ்ரீ மற்றும் அன்யதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் பேரவையின் பதவியேற்பு விழா அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், பேராசிரியர் முனைவர் சீனி திருமால்முருகன் தலைமையில் நடைபெற்றது.
அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர் பேரவையின் உறுப்பினர்களுக்கு லட்சினையினை வழங்கி பதவி யேற்ற மாணவர்களை வாழ்த்தி தலைமை பற்றிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வர் லீனா ஜோஸ் மாணவர் பேரவையின் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.
அதியமான் பப்ளிக் பள்ளி மாணவர் பேரவையின் தலைவராக பிரகாஷ், துணைத்தலைவராக கார்த்திகா ஸ்ரீ, முதன்மை அமைச்சராக சுபா, துணை முதன்மை அமைச்சராக ஜஸ்வந்த் ஆகியோர் பதவியேற்றனர். மொழி வளர்ச்சி மற்றும் இலக்கியத்துறை அமைச்சராக கேசினி, பண்பாடு மற்றும் கலாச்சார துறை அமைச்சராக அப்துல் ஜியா, விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரிஹரன், சுற்றுப்பயணங்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக பிரித்தியா, உடல்நலம் மற்றும் சுகாராதத்துறை அமைச்சராக இசையாழினி, சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சராக அன்புச்செல்வன், நீதித்துறை அமைச்சராக லக்சனா, சுற்றுச்சூழல் அமைச்சராக ஹரிகாந்த் ஆகியோர் பதவியேற்றனர்.
நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அணியின் தலைவராக அருண் பிரசாத் மற்றும் துணைத்தலைவராக சரித்ரா, சர்.சி.வி.ராமன் அணியின் தலைவராக கீர்த்திவாசன், துணைத்தலைவராக அஸ்விதா, இராமானுஜம் அணியின் தலைவராக இளவரசன் துணைத்தலைவராக அனுஸ்ரீ, அப்துல்கலாம் அணியின் தலைவராக ஸ்ரீவாணி, துணைத்தலைவராக ராகவன் ஆகியோர் பதவியேற்றனர்.
மாணவ பேரவையின் தலைவர் பிரகாஷ் தலைமையில் பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழியேற்றனர். முதன்மை அமைச்சர் சுபா ஏற்புரை வழங்கினார். மொழி வளர்ச்சி மற்றும் இலக்கியத்துறை அமைச்சர் கேசினி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிகளை மாணவிகள் கார்த்திகா ஸ்ரீ மற்றும் அன்யதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.