உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் வனப்பாதுகாவலர் பதவிக்கான கணினி வழித்தேர்வு - 3-ந்தேதி நடக்கிறது

Published On 2023-04-27 08:57 GMT   |   Update On 2023-04-27 08:57 GMT
  • உதவி வன பாதுகாவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு நெல்லையில் 2 தேர்வு மையங்களில் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது.
  • மாவட்ட அளவில் கணினி வழித்தேர்வினை 1,246 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-

தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால், தமிழ்நாடு அரசு பணியில் தொகுதி1-ஏ.யில் அடங்கிய உதவி வன பாதுகாவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.என். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய 2 தேர்வு மையங்களில் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது.

மாவட்ட அளவில் கணினி வழித்தேர்வினை 1,246 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். மேற்படி தேர்வு நாளன்று பஸ்களை தேர்வு மையத் திற்கு கூடுதலாக இயக்கு மாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு போலீ சார் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும், தேர்வு நடை பெறும் மையத்தின் அருகில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி களுடன் தயார் நிலையில் வைத்திட சுகாதாரத் துறைக்கும், தேர்வு நாளன்று தடையில்லாத மின்சார வசதியினை செய்து கொ டுக்க மின்சாரத் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங் களை முன் கூட்டியே கண்ட றிந்து தேர்வு எழுத வருமாறு கேட்டு கொள்ளப்படு கிறார்கள். மேலும், தேர்வு அறையினுள் செல்போன் களை எடுத்து செல்ல அனுமதியில்லை. தேர்வு எழுதுபவர்கள் தவிர மற்ற வர்கள் தேர்வு மைய வளா கத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News