உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்க செல்போன் எண் அறிவிப்பு

Published On 2023-05-17 08:58 GMT   |   Update On 2023-05-17 08:58 GMT
  • தமிழகத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நாமக்கல்:

தமிழகத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பல இடங்களில் கள்ளச்சா ராயம் விற்பனை செய்த வர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை, போலி மதுபான விற்பனை போன்ற மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால், பொதுமக்கள் அது குறித்த தகவல்களை 88383 52334 என்ற நம்பருக்கு போன் மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

அவ்வாறு கிடைக்கும் தகவலின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், தகவல் தருபவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். இந்த செல்போன் நம்பர் மாவட்ட எஸ்.பி.யின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News