உள்ளூர் செய்திகள்

மத்திகிரி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

Published On 2022-09-12 15:01 IST   |   Update On 2022-09-12 15:01:00 IST
  • மனம் உடைந்த கிருஷ்ணப்பா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
  • செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும் பழக்கம் இம்ரானுக்கு இருந்துள்ளதை கண்டித்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகேயுள்ள அனகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (எ ) கிருஷ்ணப்பா. தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக உடல் நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இதில் மனம் உடைந்த கிருஷ்ணப்பா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சாரதா தந்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியை சேர்ந்த இம்ரான் பாஷா (வயது 24) என்பவர் தற்போது கோணேபள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும் பழக்கம் இம்ரானுக்கு இருந்துள்ளது. இதனை அவரது வீட்டில் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த இம்ரான் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News