உள்ளூர் செய்திகள்

தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்த போது ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி.

கிருஷ்ணகிரியில் ஒரே இடத்தில் 12 தேர்களுக்கு சிறப்பு பூஜை

Published On 2022-10-06 09:57 GMT   |   Update On 2022-10-06 09:57 GMT
  • கல்கத்தா காளிக்கோவில் உட்பட 12 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர் வீதி உலா வந்தனர்.
  • 12 தேர்களும் ஒரே இடத்தில் கிழக்கு நோக்கி நிறுத்தி தீபாராதனை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியில் நவராத்திரி விழாவை யொட்டி, கோவில்களில் கொழு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாப்பட்டது.

9 நாளும் கோவில்களில் உள்ள அனைத்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தினமும் பூஜைகள் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் பழையப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோவில், கவீசுவரர் கோவில், காட்டி நாயனப்பள்ளி முருகன் கோவில், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில், கிருஷ்ணகிரி நகர் பகுதி உள்ள கிருஷ்ணன் கோவில், ராமர் கோவில், படவட்டம்மாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஞானவிநாயகர் கோவில், கல்கத்தா காளிக்கோவில் உட்பட 12 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேர் வீதி உலா வந்தனர்.

நேற்று காலை அனைத்து தேர்களும் பழையப்பேட்டை வந்தடைந்தது. அப்போது, 12 தேர்களும் ஒரே இடத்தில் கிழக்கு நோக்கி நிறுத்தி தீபாராதனை செய்யப்பட்டது.

மேலும், செண்டை மேளம், பம்பை முழங்க வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் வன்னி மரத்தின் இலைகளை எடுத்து சென்று வீட்டில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம் என்பதால், ஏராளமான பக்தர்கள் வன்னி மரத்தின் இலைகளை எடுத்து சென்றனர். இவ்விழாவினை காணவும், சாமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யவும் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News