கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா
- காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் லலித் ஆண்டனி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி.சி.சேகர், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு
முன்னாள் மாவட்ட தலைவர் அக. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். முன்னதாக மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், தர்கா, தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திர வர்மா, மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், கவுன்சிலர் விநாயகம், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் கமலக்கண்ணன், நகர துணை தலைவர்கள் பிலால், மரிய இருதயம், வட்டார தலைவர்கள் மாது, கோபால், அமல்ராஜ், முன்னாள் நகர தலைவர் முபாரக், காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.