உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எண்ணேகொள் அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்வதற்காக ரூ.233 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார். அருகில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார் உள்ளார்.

கிருஷ்ணகிரியில் ரூ.236.83 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் நீர்பாசன திட்டங்கள் -கலெக்டர் ஆய்வு

Published On 2022-10-27 15:08 IST   |   Update On 2022-10-27 15:08:00 IST
  • மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார்.
  • வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் எண்ணேக்கொள் அணைக்கட்டில் ரூ.233 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணிகள், ரூ.3 கோடியே 83 லட்சம் மதிப்பில் அத்திமுகாம் தளவாய் ஏரி மற்றும் கோவிந்தகவுண்டன் ஏரிகள் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.236 கோடியே 83 லட்சம் மதிப்பிலான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஏரிகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், 4 ஏரிகளில் 723.80 ஏக்கர் நிலங்களின் பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரிகளில் தூர்வாரி, கரையை பலப்படுத்துதல், மதகுகள் சரி செய்யும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீரை சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு வழங்க பொதுப்பணித்துறை யினருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.

மேலும், ரூ.233 கோடி மதிப்பில் எண்ணேக்கொள் அணைக்கட்டின் வலது மற்றும் இடதுபுறத்திலிருந்து புதிய வழங்கு கால்வாய் அமைத்து தென்பெண்ணை யாற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இக்கால்வாய் பணிகளை விரைந்து முடித்து விவசாயகளின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்(நீர்வள ஆதாரம்) குமார், உதவி செயற்பொறியாளர்கள் உதயகுமார், உதவி பொறி யாளர்கள் பார்த்தீபன், சையத் ஜக்ருதீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News