உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி நகரில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
- இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் வசந்தா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றனர்.
- வசந்தா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் நகை பறித்த வாலிபர்களில் ஒருவரை மடக்கினர். மற்றொருவர் தப்பிவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்னகிரி பவர் ஹவுஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 62).இவர் எல்.ஐ.சி.ஏஜெண்டாக உள்ளார்.
இவர் கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் வசந்தா அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்ப முயன்றனர்.
வசந்தா கூச்சலிடவே அப்பகுதியில் இருந்தவர்கள் நகை பறித்த வாலிபர்களில் ஒருவரை மடக்கினர். மற்றொருவர் தப்பிவிட்டார். பிடிபட்ட வாலிபரை கிருஷ்ணகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன் சத்திரத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் அலி (18) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய அவரது கூட்டாளி மைதீன் (18) என்பவரை தேடி வருகின்றனர்.