உள்ளூர் செய்திகள்

கருணாநிதி பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

காவேரிப்பட்டணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Published On 2022-06-09 16:36 IST   |   Update On 2022-06-09 16:36:00 IST
  • கருணாநிதி பிறந்த நாளை யொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • 3 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் கருணாநிதி 99-வது பிறந்தநாளை முன்னிட்டு காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் வரவேற்றார்.

விழாவிற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கே.எஸ். செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

பொதுக்குழு உறுப்பினர் ராஜன், ஒன்றியக் செயலாளர்தேங்காய் சுப்ரமணி, பேரூர் செயலாளர் பாபு , முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் விவேகானந்தன், தொழிலதிபர் உடன்பிறப்பு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் 99 கிலோ கேக் வெட்டி, 3000 லட்டு, 2000 பெண்களுக்கு புடவை, 1000 ஆண்களுக்கு வேட்டி, 3000 பொதுமக்களுக்கு பிரியாணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி, கடலரசு மூர்த்தி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினி செல்வம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் நகர நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News