உள்ளூர் செய்திகள்

காமராஜர் சிலைக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

காவேரிப்பட்டணத்தில் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

Published On 2022-10-03 14:08 IST   |   Update On 2022-10-03 14:08:00 IST
  • காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.
  • காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது..

கிருஷ்ணகிரி,

காவேரிப்பட்டணம் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் தேவநாராயணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் கிருஷ்ணன், சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.சுப்பிரமணியம் கலந்து கொண்டு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாவித்கான், சுப்பிரமணி, முஸ்தபா, பச்சப்பன், சாப்பரம் சுரேஷ், ரகு, மாது, ஜெயபால், கோவிந்தசாமி, சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.. காமராஜர் சிலைக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News