உள்ளூர் செய்திகள்

காவேரிபட்டணத்தில் சாலையில் வைக்கப்படும் பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

Published On 2023-03-28 10:21 GMT   |   Update On 2023-03-28 10:21 GMT
  • சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேருந்து நிலைய மேம்பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், சாலையை மறித்து சினிமா பேனர்களை வைத்துள்ளனர்.

இதனால் அவ்வழியே செல்பவர்கள் போஸ்டரை பார்த்து செல்லும் சமயத்தில் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தும், நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் உள்ளது.

அப்பகுதியில் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடைக்காரர்கள், சினிமா தியேட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதில் சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அருகிலேயே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் காவேரிப்பட்டினம் ஒன்றிய அலுவலகம் உள்ளது. ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக இந்த பேனர்களை அகற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News