உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். 

ஓசூரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்

Published On 2022-06-09 16:46 IST   |   Update On 2022-06-09 16:46:00 IST
  • கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்.
  • பிரகாஷ் எம்.எல்.ஏ-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட துவாரகா நகர் விரிவாக்கம், சாய்கார்டன் பகுதிகளில்15 -வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் 20 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மற்றும் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

மேலும் இதில், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லக்ஷ்மி நவீன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News