உள்ளூர் செய்திகள்

கங்கசந்திரத்தில் புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் -அசோக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Published On 2022-09-30 15:34 IST   |   Update On 2022-09-30 15:34:00 IST
  • மின்சாரம் பற்றாக்குறை இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
  • அசோக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம் குருபரப்பள்ளி அருகில் உள்ள கங்கசந்திரம் கிராமத்தில் 150 வீடுகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக மின்சாரம் பற்றாக்குறை இருப்பதாக அப்பகுதி மக்கள்

புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி அ.தி.மு.க.,

எம்.எல்.ஏ., அசோக்குமாரின் அறிவுறுத்தலின் பேரில், கங்கசந்திரம் கிராமத்தில் 63 கே.ஏ.வி., டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரை நேற்று காலை அசோக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆஞ்சலா சகாயமேரி, உதவி பொறியாளர் சரவணன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், குருபரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, கவுன்சிலர் திம்மராஜ், பாசறை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், கார்த்திக் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News