உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 வாலிபர்கள் பலி

Published On 2022-07-05 13:55 IST   |   Update On 2022-07-05 13:55:00 IST
  • மஞ்சுநாத் என்ற வாலிபர் பேரிகை-தீர்த்தம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
  • வாகனம் மோதிவிட்டு சென்றதில் தீபக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கேரளா மாநிலத்தை சேர்ந்த சாகுல் அஹமது (28) என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

இது குறித்து அவரது மாமா ஜலால் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தீபக்குமார்(25) என்ற வாலிபர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் கிரானைட் கம்பனி அருகேயுள்ள பிரிவு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் மோதிவிட்டு சென்றதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தாய் தேவி தந்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாத்(20) என்ற வாலிபர் பேரிகை-தீர்த்தம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News