உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
- இளைஞர் காங்கிரஸ் சார்பில், சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
- கிருஷ்ணகிரி செல் லக்குமார் எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி செல் லக்குமார் எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநில காங்கிரஸ் செயலாளர் தேன், கு அன்வர், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், காங்கிரஸ் நகரதலைவர் பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா, முன்னாள் நகர தலைவர் தாஸ், தொழிலதிபர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.