உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் சோதனை செய்த போது எடுத்தபடம்.

தருமபுரியில் விதி மீறிய 4 ஆட்டோக்கள் பறிமுதல்

Published On 2023-04-12 10:15 GMT   |   Update On 2023-04-12 10:15 GMT
  • தகுதிச்சான்று இல்லாத வாகனம் என 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர்.
  • ஓட்டுனர் உரிமம் இல்லாதவை என்பது போன்ற விதிமீறல்க ளுக்கான சோதனையில் 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி நகரப் பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ மற்றும் சீட் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. தருமபுரி நகர பகுதியில் நகரப் பேருந்துகள் பல பகுதிகளுக்கு குறைவாக இயக்கப்படுவதால் பஸ் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், பென்னாகரம் சாலை, திருப்பத்தூர் சாலை, உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் ஆட்டோவையே நம்பி உள்ளனர்.

ஆட்டோ தொழிலில் அதிக லாபம் இருப்பதால் அரசு துறையை சார்ந்தவர்கள் தனி ஆட்களை வைத்து 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை இயக்கு வருகின்றனர்.

இந்த ஆட்டோக்களுக்கு பர்மிட், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் ஆகியவை இல்லாமலேயே இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் பொழுது மேலிட அழுத்தத்தின் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைக்கு காவல்துறையினர் தள்ளப்படுகின்றனர்.

தொடர்ந்து ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றுவது ஓட்டுனரின் இருபக்கமும் பயணிகளை அமர வைத்து பாதுகாப்பற்ற முறையில் ஆட்டோக்களை இயக்கி வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் வந்தது.

அதன்படி நேற்று நெசவாளர் காலனி பகுதியில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சின்னசாமி மற்றும் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரகுநாதான் காமராஜ் உள்ளிட்டோர் சோதனையிட்டனர்.

அதில் உரிமம் பெறாத ஆட்டோக்கள், அதிக ஆட்களை ஏற்றி சென்றது, தகுதிச்சான்று இல்லாத வாகனம் என 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்தனர்.

சரியான இருக்கை பொருத்தாதது, காப்பீடு இல்லாதது, போக்கு வரத்து விதிகளை மீறி அதிக ஆட்களை ஏற்றிச் செல்வது, ஓட்டுனர் உரிமம் இல்லாதவை என்பது போன்ற விதிமீறல்க ளுக்கான சோதனையில் 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தற்பொழுது ஆட்டோ ஓட்டுனர்கள் முறையாக ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம், அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும்.

விதிமுறை மீறி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுவது, பாரம் அதிகம் ஏற்றும் ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடி க்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News