உள்ளூர் செய்திகள்

 பொதுமக்களுக்கு கந்துவட்டி குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்தபடம்.

போச்சம்பள்ளியில் கந்துவட்டி, மீட்டர் வட்டி பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-07-29 09:34 GMT   |   Update On 2022-07-29 09:34 GMT
  • கந்துவட்டி, மீட்டர் வட்டிகளுக்கு பணம் வாங்கி கூடுதல் பணம் கேட்கும் நபர்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குழந்தைகள் தடுப்பு மைய உதவி எண்ணிற்கும் அழைத்து புகார் அளிக்க வேண்டும்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல்துறையின் சார்பில் போச்சம்பள்ளி பேருந்து நிலையம், பாளேத்தோட்டம் பிரிவு சாலை, செல்லம்பட்டி பிரிவு சாலை, 4 வழி சாலை ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.

இதில் பாளேத்தோட்டம் பிரிவு சாலையில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இதில் கந்துவட்டி, மீட்டர் வட்டிகளுக்கு பணம் வாங்கி கூடுதல் பணம் கேட்கும் நபர்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறித்து தகவல் அறிந்தால் காவல் உதவி எண்ணிற்கும், குழந்தைகள் தடுப்பு மைய உதவி எண்ணிற்கும் அழைத்து புகார் அளிக்க வேண்டும்.

பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்கள் காவலன் ஆப்பை தங்களது செல்போனில் பதிவு செய்து அதில் உள்ள எமர்ஜென்சி பொத்தானை அழுத்தி காவல்துறையின் உதவியை எளிதில் பெற முடியும் என்ற ஆலோசனைகளை வழங்கினர். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News