உள்ளூர் செய்திகள்

பர்கூர் சட்டப்பேரவை தொகுதியில் 4 அரசு பேருந்துகளின் வழித்தடங்கள் நீட்டிப்பு -மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-11-13 15:05 IST   |   Update On 2022-11-13 15:05:00 IST
  • தடம் எண்: கே 54-ஐ போச்சம்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • எம்எல்ஏ மதியழகன் தலைமை வகித்து பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் கிராமம் இயக்கப்படும் அரசு பேருந்து தடம் எண்:13-ஏ, வேலம்பட்டி கிராமம் வரை நீட்டிக்க வேண்டும். ஊத்தங்கரையில் இருந்து படவனூர் ரயில்வே கேட், ஒலைப்பட்டி வழியாக போச்சம்பள்ளி வரை இயக்கப்படும் தடம் எண்: யு-08 பேருந்து பாரண்டப்பள்ளி புதூர், பூதனூர் வழியாக நீட்டிப்பு செய்ய வேண்டும்.

மேலும், கிருஷ்ணகிரி நகரில் இருந்து ஜெகதேவி, பர்கூர் வழியாக மஸ்திகானூர் வரை இயக்கப்பட்ட அரசு பேருந்து தடம் எண்:கே 15, மரிமானப்பள்ளி கிராமம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இதே போல், கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் பாலேகுளி, வேலம்பட்டி, கரடியூர் இயக்கப்படும் அரசு பேருந்து தடம் எண்: கே 54-ஐ போச்சம்பள்ளி வரை நீட்டிக்க வேண்டும் அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை, பர்கூர் எம்எல்ஏ மதியழகனிடம், கிராம மக்கள் அளித்தனர். இதுகுறித்து திருப்பத்தூர், ஊத்தங்கரை மற்றும் கிருஷ்ணகிரி போக்கு வரத்து பணிமனை அலுவ லர்களிடம் தெரிவித்து, 4 பேருந்துகளின் வழித்தடத்தை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வழித்தட நீட்டிக்கப்பட்ட பேருந்துகளின் தொடக்கவிழா, பர்கூர் பேருந்து நிலையத்தில் நடந்தது. எம்எல்ஏ மதியழகன் தலைமை வகித்து பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, பேருந்தில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு, பூக்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், ஒன்றியக்குழு தலைவர் கவிதாகோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மகேந்திரன், அறிஞர் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News