உள்ளூர் செய்திகள்

வார்டு பிரச்சினைகள் சம்பந்தமாக அலுவலர்களை தொடர்பு கொண்டால், கண்டு கொள்வதே இல்லை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

Published On 2023-09-28 15:30 IST   |   Update On 2023-09-28 15:30:00 IST
  • ஒசூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
  • அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாநகராட்சி கூட்ட ரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய தி.மு.க.,, அதிமுக உறுப்பினர்கள், தங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் வசதி, ரோடு வசதி, கழிவுநீர் கால்வாய் ஆகியன குறித்து வலியுறுத்தினர். மேலும், குறைகள் மற்றும வார்டு பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்களை தொடர்பு கொண்டால் எங்களை மதிப்பதே இல்லை, பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதேயில்லை என்றும் குற்றம் சாட்டினர். மன்ற உறுப்பி னர்களின் கேள்வி களுக்கு மேயர் சத்யா மற்றும் ஆணையாளர் சினேகா ஆகியோர் பதிலளித்து பேசினர்.

இந்த கூட்டத்தில், மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

Similar News