உள்ளூர் செய்திகள்

பொதுமக்களின் பணத்தை முதலீடு செய்த இடத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தலைமறைவானேன்: மோசடி மன்னன் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2023-10-18 07:18 GMT   |   Update On 2023-10-18 07:18 GMT
  • இதற்காக அதே ஊரைச் சேர்ந்தவ ஒரு சிலரை ஏஜெண்டுகளாக நியமனம் செய்தார்.
  • அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் என்பவரது மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மூரார்பா ளையத்தில் அலுவலகம் அமைத்து, ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதற்காக அதே ஊரைச் சேர்ந்தவ ஒரு சிலரை ஏஜெண்டுகளாக நியமனம் செய்தார்.இதனை நம்பி ஏராளமானோர் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்தனர். ஆரம்ப காலத்தில் வட்டி வழங்கி ஷமீர் அகமது, கடந்த சில மாதங்களாக வட்டி வழங்கவில்லை. மேலும், மூரார்பாளையத்தில் இருந்து அலுவலகம், தொழில் நிறுவனங்களை மூடிவிட்டு தலைமறை வாகினார்.

அவரிடம் பணிபுரிந்த ஏஜெண்டுகள், ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து அவரை மூரார்பாளை யத்திற்கு அழைத்து வந்து, சங்கராபுரம் போலீசாரிடம் ஓப்படை த்தனர். போலீ சாரின் விசாரணையில் மோசடி மன்னன் ஷமிர் அகமது கூறியதாவது:-எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த முத்து கிருஷ்ணாபுரம் ஆகும். எனது சகோதரியை கள்ளக்கு றிச்சியில் திருமணம் செய்து கொடு த்துள்ளதால், அப்பகுதியில் எனக்கு பழக்கம் ஏற்பட்ட து. நான் கடந்த 15 வரு டமாக மூரார்பாளை யத்தில் வசித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள எனக்கு திருமணமாகி ரூபா என்கிற அப்ரீன் என்ற மனைவியும், 1 ½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நகைக்கடை உரிமையாளர், அவரிடம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி கொடுத்தார்.

அதேபோல் நானும் எனது பெயரில் மூரார்பாளையம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவனம் தொடங்கி ஏஜெண்டுகள் மூலம் வாடிக்கையாளர்களை பிடித்து பணத்தை பெற்று முதலீடு செய்தேன். நான் முதலீடு செய்த இடத்தில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தலைமறைவாகி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தேன். பணத்தை முதலீடு செய்த பொதுமக்களின் தொந்தரவு தாங்க முடியாததால், அந்த வீ்ட்டை காலி செய்து விட்டு உறவினர் வீட்டில் வசித்து வந்தேன். இருந்தபோதும் என்னிடம் பணி புரிந்த ஏஜெண்டுகள் என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு ஷமீர் அகமது தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து மோசடி மன்னன் ஷமீர் அகமதுவை, சங்கராபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், ஷமீர் அகமது பொதுமக்களிடம் எவ்வளவு பணம் வசூல் செய்தார்? எத்தனை பேருக்கு பணத்தை திருப்பி கொடுத்துள்ளார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை?. எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சங்கராபுரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News