உள்ளூர் செய்திகள்

குடிசை வீடு எரிந்து நாசம்

Published On 2023-08-19 10:08 GMT   |   Update On 2023-08-19 10:08 GMT
  • வீட்டில் யாரும் இல்லை. இந்நிலை யில் அவர்களது குடிசை வீட்டில் நேற்று மாலை திடீரென புகை வந்துள்ளது.
  • சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை எரிந்துள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த நேரிட மானப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி பெரியக்கா (65).

நேற்று காலை வழக்கம் போல லட்சமணன் ஆடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு சென்றுள்ளார். பெரியக்காவும் ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் அவர்களது குடிசை வீட்டில் நேற்று மாலை திடீரென புகை வந்துள்ளது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை எரிந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து குடிசையில் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த பர்கூர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைப்பதற்குள் குடிசை முற்றிலும் எரிந்து நாசமானது.

வீட்டில் இருந்த, 5 மூட்டை நெல், அரை மூட்டை அரிசி, ஒன்றரை மூட்டை கம்பு, 1 மூட்டை கேழ்வரகு உள்ளிட்ட உணவுப்பொருட்களுடன் ரேஷன், ஆதார், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்ககளும் தீயில் கருகின. விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News