உள்ளூர் செய்திகள்

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக்கூடாது

Published On 2023-05-30 15:40 IST   |   Update On 2023-05-30 15:50:00 IST
  • செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.
  • உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு , உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாநகராட்சியில் உரிமம் பெறுவதற்கு,வாகன உரிமையாளர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, ரூ.2,000- கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமம், வாகனங்களுக்கு வழங்கப்படும்.

உரிமம் பெறாமல் வாகனங்களை இயக்குவது கண்டறியப்பட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவை பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற எக்காரணத்தை கொண்டும் மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்க வேண்டும்.

இந்த பணிக்காக ஏற்கனவே ஓசூர் மாநகராட்சி பகுதியில், 18 வாகனங்கள் உரிமம் பெற்றுள்ளன. அந்த வாகனங்களை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் பயன்படுத்திக ்கொள்ளலாம்.

இவ்வாறு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News