ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியில்
சுகாதார சீர்கேடுகளால் பரவி வரும் தொற்று நோய்-
வீடுகளில் முடங்கிய மக்கள்
ஓசூர் வெங்கடேஷ் நகர் பகுதியில் சுகாதார சீர்கேடுகளால் பரவி வரும் தொற்று நோய்- வீடுகளில் முடங்கிய மக்கள்
- ஏரி கரையோரத்தில் பன்றி, கோழி மற்றும் மீன் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
- அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.
ஓசூர் செப்.25-
ஓசூர் மாநகராட்சி 10 வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேஷ் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள அலசநத்தம் ஏரி கரையோரத்தில் பன்றி, கோழி மற்றும் மீன் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் பல இடங்களில் சாக்கடைகள் மற்றும் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.
சுகாதார சீர்கேட்டால், வெங்கடேஷ் நகர் பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் சிறுவர்கள், பெரியவர்கள் உள்பட ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர்.
பாதிப்புக்குள்ளான பலர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெங்கடேஷ் நகர் பகுதியில் பரவி வரும் நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும், சுகாதார சீர்கேடுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், ஒசூர் மாநாகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.