உள்ளூர் செய்திகள்
ஓசூர் நகர்ப்புற நல வாழ்வு புதிய மையம் திறப்பு
- ஓசூரில் 8, கிருஷ்ணகிரியில் 1 என ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 9 நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
- நகர்ப்புற நல மையத்தில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்து விளக்கேற்றி வைத்தார். நகர்ப்புற நல மையத்தில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்து விளக்கேற்றி வைத்தார்.
ஓசூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையி லிருந்து, காணொளி காட்சி வாயிலாக ஓசூரில் 8, கிருஷ்ணகிரியில் 1 என ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 9 நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஓசூர்-தளி சாலையில் கணபதி நகரில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல மையத்தில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு குத்து விளக்கேற்றி வைத்தார்.
விழாவிற்கு, டாக்டர் செல்ல குமார் எம்.பி., ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் விழாவில், மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சுகதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.