உள்ளூர் செய்திகள்

ஓசூர் குணம் மருத்துவமனையில், இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மையம் திறந்து வைத்தபோது எடுத்த படம்.

ஓசூர் குணம் மருத்துவமனையில் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மையம் தொடக்கம்

Published On 2022-10-08 14:52 IST   |   Update On 2022-10-08 14:52:00 IST
  • இலவச பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • பரிசோதனைக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது”.

ஓசூர்

ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள குணம் மருத்துவமனையில், பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கு இலவச பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை, குணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட 3 பெண்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மருத்து வமனை இயக்குனர்கள் டாக்டர் பிரதீப், டாக்டர் செந்தில் மற்றும் டாக்டர் அக்ஷயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர், டாக்டர் பிரதீப், டாக்டர் செந்தில் அகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவைப் பொறுத்த வரை, 1 லட்சம் பெண்களில், 26 பேர் மார்பக புற்று நோய்க்கு ஆளாகின்றனர். அவர்களில் 13 பேர் இறந்து விடுகின்றனர். இந்த நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த இலவச பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, தினமும் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இதற்கென ஒரு பெண் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பரிசோதனை மையம் செயல்படும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், பரிசோதனை செய்து கொண்டு பயனடையலாம். மேலும் இங்கு மேமோகிராம் பரிசோதனைக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது".

இவ்வாறு அவர்கள் கூறினர். அப்போது டாக்டர்கள் பிரபுதேவ், அக்ஷயா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News