ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்க வந்த போது எடுத்த படம்.
ஓசூர் அனுமந்த நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் -தாசில்தாரிடம் கோரிக்கை மனு
- மழை வெள்ளத்தால் 20 வீடுகள் பலத்த சேதமடைந்தன.
- தாசில்தார் கவாஸ்கரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள அனுமந்த நகர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு பெய்த கனமழையாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பும் மழை வெள்ளத்தால் 20 வீடுகள் பலத்த சேதமடைந்தன.
இதையடுத்து அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 30 பேர் மனித உரிமைகள் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் மணிவண்ணன் தலைமையில், ஓசூர் தாசில்தார் கவாஸ்கரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.
அதில், மாவட்ட கலெக்டர் உறுதி அளித்ததை நிறை வேற்றும் வகையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு உடனடி யாக மாற்று இடம் அல்லது வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல், ஓசூர் சப்- கலெக்டர் அலுவ லகத்திலும் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.