உள்ளூர் செய்திகள்
சாதனை படைத்த மாணவிகளை படத்தில் காணலாம்.
மாநில அளவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தருமபுரி மாணவிகள் சாதனை
- பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சாதனை படைத்த மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி,
கரூர் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த போட்டியில் தருமபுரி மாவட்ட மாணவிகள் உள்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியாளர்கள் குமார், கணேஷ் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்ட தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த மல்லசமுத்திரத்தை சேர்ந்த, சக்திவேல்-புவனா மகள் சவுமியா ஸ்ரீ தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேபோல் தருமபுரி எஸ்.வி ரோடு பகுதியில் வசிக்கும் முருகன்-ரேவதி மகள்கள் தர்ஷினி வெள்ளிப்பதக்கமும், யாழினி வெண்கல பதக்கமும் வென்று தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.