உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுவதை படத்தில் காணலாம்.

தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல், குவியலாக ரசாயன நுரை

Published On 2023-04-08 15:54 IST   |   Update On 2023-04-08 15:54:00 IST
  • நீரில் குவியல் குவியலாக நுரை பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  • இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுவதாலும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு அதிகளவில் நுரைபொங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இன்று அணைக்கு, விநாடிக்கு 340 கனஅடிநீர் வந்தது, விநாடிக்கு 340 கனஅடி நீரானது, தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது..

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல் குவியலாக நுரை

பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகா மாநில தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள், ரசாயன கழிவுகளை, தென்பெண்ணை ஆற்றில் கலப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

தற்போது தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக வெளியேறும் ரசாயன நுரை, துர்நாற்றம் வீசுவதுடன்,வெள்ளை நிறத்தில் பனி போர்த்தியது போல் காணப்படுகிறது. மேலும் இவை காற்றில் பறந்து அந்த பகுதியில் உள்ள செடிகொடிகள் மீது திட்டு, திட்டாக படர்வதும், அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுவதாலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News