உள்ளூர் செய்திகள்

சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்ட காட்சி.

நெல்லையில் கலெக்டர் தலைமையில் சுகாதார பேரவை கூட்டம்

Published On 2023-02-27 15:00 IST   |   Update On 2023-02-27 15:00:00 IST
  • நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் மாவட்ட சுகாதார பேரவை அமைக்கப்பட்டுள்ளது.
  • கூட்டத்தில் வட்டார மருத்துவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சுகாதார பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

நெல்லை:

நெல்லை மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சுகாதார தரத்தை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கி துணை யுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் மாவட்ட சுகாதார பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இன்று அதன் கூட்டம் நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறைக்கும், சமுதாயத்திற்கிடையே நல்லுறவு ஏற்படுத்துவது, அனைவருக்கும் சமமான சுகாதாரம் முறையாக கிடைக்க செய்வது ஆகியவை இந்த பேரவையின் நோக்கமாகும்.

மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வட்டார மருத்துவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சுகாதார பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

கூட்டத்தில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) ராமநாதன், தொழுநோய் தடுப்பு துணை இயக்குனர் அளர்சாந்தி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, இணை இயக்குனர் (காசநோய் தடுப்பு) வெள்ளைச்சாமி மற்றும் வட்டார மருத்து வர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கூட்ட வளா கத்தில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, தொழு நோய் தடுப்பு பிரிவு உள்ளிட்டவைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. அதனை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

Tags:    

Similar News