உள்ளூர் செய்திகள்
பாலியல் வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது
- பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- அபீல் அபுபக்கர் கேரள மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அபீல் அபுபக்கர்(32). இவர் மீது கேரள மாநிலம் திருச்சூர் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாலியல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
ஆனால் அபீல் அபுபக்கர் போலீசிடம் சிக்காமல், வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் கத்தார் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அபீல் அபுபக்கர் கேரள மாநில போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதுபற்றி கேரளமாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அபீல் அபுபக்கரை கைது செய்து அழைத்து சென்றனர்.