உள்ளூர் செய்திகள்

உமா சங்கர்

பெண் அதிகாரியை குத்தி கொல்ல முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-06-23 03:54 GMT   |   Update On 2022-06-23 03:54 GMT
  • தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலரை கத்தியால் குத்திய சக ஊழியர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
  • மேலும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தேனி :

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(51). இவர் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 30-ந்தேதி பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவரது அறைக்குள் புகுந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட இளநிலை உதவியாளர் உமாசங்கர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் ராஜராஜேஸ்வரி படுகாயமடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உமாசங்கரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பெண் அதிகாரியை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட உமாசங்கரை குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News