- அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் பங்கேற்றனர்.
- வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
ஊட்டி,
குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் ெஹத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடி வருகின்றனர். ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, ேபரட்டி, மல்லிெகாரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதையொட்டி பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.
இதனை முன்னிட்டு நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், அமப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.