உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்-10-ந் தேதி நடைபெறுகிறது

Published On 2023-01-07 09:12 GMT   |   Update On 2023-01-07 09:12 GMT
  • தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
  • குறைகேட்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு ஒவ்வொரு மாதம் 2-வது செவ்வாய்க் கிழமை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார அளவிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையிலும் குறைகேட்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

எனவே, ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்படும் குறைகேட்பு முகாமிலும், மாவட்ட அளவில் ஜனவரி மாதம் 2-வது செவ்வாய்க் கிழமையான வருகிற 10-ந் தேதி தென்காசி, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் முன்னிலையில் நடத்தப்படும் குறைகேட்பு முகாமிலும் ஊரகப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News