உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் பசுமைக்கு மாறிய வனப்பகுதி-சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

Published On 2022-07-01 10:08 GMT   |   Update On 2022-07-01 10:08 GMT
  • முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்வதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காண இங்கு வருகிறார்கள்.
  • வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. அதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மசினகுடி வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது. புலிகள் காப்பக பகுதியில் இந்த சாலைகள் செல்வதால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள், தனியார் வாகனங்கள் இவற்றின் வழியே சென்று வருகின்றன.

மேலும், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்வதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காண இங்கு வருகிறார்கள்.

இதையொட்டி வனத்துறை சார்பில் இயக்கப்படும் வாகனங்களில் பயணம் செய்து வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் வனத்துறையினர் அழைத்துச் செல்லும் பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவது உண்டு.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை வறட்சியால் முதுமலை புலிகள் காப்பகம் பசுமையை இழந்து காணப்பட்டது. இதனால், வன விலங்குகளின் நடமாட்ட மும் குறைவாக இருந்தது.

வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. அதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மான் கூட்டம், காட்டெருமை கூட்டம், யானை கூட்டம் மயில்கள் என வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இருப்பினும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

Tags:    

Similar News